குரு பெயர்ச்சி

Thursday, 21 October 2021

நாராயணர் பக்தரும், முருக பக்தையும்

 இந்த தொடர்... கதை அல்ல நிஜம்,, 



 மக்களாகிய நாம்தான் சைவம் பெரிதா வைணவம் பெரிதா என்று பேசிக் கொண்டிருக்கிறோம்,,  ஆனால் சிவபெருமானின் எண்ணம் என்னவென்றால் எனது ஆருயிர் மைத்துனர் நாராயணனின் சகோதரியான பார்வதியை நான் திருமணம் செய்து விட்டேன்,, நாராயணனின் செல்வ மகள் அதாவது அமுதவல்லி குமுதவல்லி ஆகிய இருவரும் எனது வீட்டிற்கு மருமகளாக வரவேண்டும் என்பது சிவபெருமானின் ஆவலாக இருந்தது, முருகன் பிறப்பதற்கு முன் ஒரு கல்பத்தில் நாராயணனின் செல்வ குழந்தைகளாக அமுதவல்லி யும் குமுதவல்லி யும் பிறந்தனர்,, இந்த அமுதவல்லி குமுதவல்லி அந்த கல்பத்தில் கன்னியாகவே வாழ்ந்தனர்,, இவர்களை கரம் கொண்டு பிடிக்க சிவபெருமான் மகன் அப்பொழுது அவதாரம் செய்யப்படவில்லை, இங்கு நடத்தப்படும் கடவுளின் ஒவ்வொரு அவதாரமும் உண்மைகளை உணர்த்துவதற்காகவே மட்டுமே,, அந்த கல்பத்தின் அமுதவல்லி குமுதவல்லி தவமிருந்து சிவபெருமானிடம் தங்கள் மகனை கரம் பிடிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றனர், அடுத்த பிறவி எடுக்கும் வரை இந்த அமுதவல்லி  குமுதவல்லி என்கிற வள்ளி தெய்வானை இந்த தீவிர முருக பக்தராக இருந்தனர், இது ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முருகன் யார் என்று இவர்களுக்கு தெரியாது, வரப்போகும் அவதாரத்தை எண்ணி மனதால் காதல் கொண்டனர்,, முருக பக்தையை ஆட்கொள்வது என்பது நாராயணரின் மருமகனால் மட்டுமே  முடியும்,, காரணம் நாராயணரை பற்றி சிவனும் சிவனார் மகன் முருகன் ஆகிய இருவரைத் தவிர வேறு எவராலும் புரிந்துகொள்ள இயலாது,, 


 அதன் பிறகு வந்த கல்பத்தில் முருகன் சூரனை வென்ற அது எல்லாம் தங்களுக்கு தெரியும்,,  சூரனை முருகன் வென்ற பொழுது முருகனின் கோபத்தை எவராலும் அடக்க முடியாத ஒரு உச்சத்திற்கு இருந்தது,, நேரத்தில்தான் நாராயணரின் மகள்கள் ஆகிய அமுதவல்லி குமுதவல்லி என்ற இரு பெண்கள் வெவ்வேறு இடங்களில் வேடனுக்கு மகளாக குமுதவல்லி யும் இந்திரனுக்கு மகளாகிய அமுத வள்ளியும் முருகனைக் கரம் பிடிக்க காத்துக்கொண்டிரந்தனர்,, இந்த இருவருக்கும் தாங்கள் பூமியில் எதற்கு பிறந்தோம் என்றே தெரியாமலே வாழ்ந்து வளர்ந்து வந்தனர்,,  நிலையில்தான் முருகன் சூரனை வென்று அவர் கோபத்தை தணிக்க நாராயணனின் மகளாகிய அமுதவல்லி  இந்திர தேவனிடம் மகளாக வளர்ந்து, கந்த சஷ்டி விழா முடிந்த பிறகு மறுதினம் சப்தமித் திதியில் முருகன் முன்னே அமுதவல்லி என்கிற தெய்வானை கண்டவுடன் முருகனும் தெய்வானையும் காதல் கொள்கின்றனர்,,  

 இந்த சூரசம்ஹாரம் நடைபெற்றது உண்மையான நோக்கமே சிவனும் நாராயணனும் சம்பந்தி ஆகுவதற்காக வே.. சூரசம்ஹாரம் முடிந்தவுடன் விழா நிறைவு பெறவில்லை, இனிதான் ஆட்டமே ஆரம்பம்,, முருக பக்தையாக தனக்காக காத்துக்கொண்டிருந்த தெய்வானையை கரம் பிடித்த காத்துக்கொண்டிருந்த தருணம் இது,, கந்த சஷ்டி விழா முடிந்தவுடன் மாலை சூரசம்காரம் நிறைவு பெற்றவுடன் அவரவர் உடனே கலைந்து விடுகின்றனர்,  முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் நாராயணர் மகளாகிய தெய்வானையை கரம் பிடிக்கிறார்,, முருகனின் கோபம் சிறிதளவு கூட இல்லாமல் அழகன் என்ற பெயரெடுத்த முருகன் உண்மையிலேயே அவ்வளவு அழகாய் தெய்வானையை கரம் பிடித்து நின்றார்,, அதன்பிறகு வேடர்குல பெண்ணாகிய குமுதவல்லி என்கிற வள்ளி தேவியை காதல் விளையாட்டுக்கள் விளையாடி முருகன் மணக்கிறார், 

 இந்த நிலையில் தனது மகள்கள் தனது உள்ளம் கவர்ந்த மைத்துனர் ஆகிய சிவபெருமான் மகனுக்கு திருமணம் செய்துகொண்டது நாராயணனின மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,, இந்த நிலையில்தான் நாராயணர் முருகன் வள்ளி தெய்வானைக்கு அழைப்பு விடுக்கிறார் மூவரும் ஒரு சேர வந்து விருந்து அருந்த,,  அவ்வாறு வள்ளி தெய்வானையுடன் முருகன் நாராயணருக்கு காட்சி தந்த திருத்தலம் பழமுதிர்சோலை ஆகும்,, 

 தனது தந்தைக்கு நிகரான மதிப்பும் மரியாதையும் முருகப்பெருமான் மாமனார் மாமியாருக்கு கொடுத்ததில் கடுகளவும் குறை இல்லை,, அழகர்மலை கீழே பழமுதிர்ச்சோலை மேலே,, காட்சியைக் காணும்பொழுது பெருமாள் மடிமீது மருமகன் முருகன் அமர்ந்தத போன்ற ஒரு தோற்றம் அளிக்கும்,, அதை கற்பனையில் எண்ணிப்பார்க்கவே ஆயிரம் கற்பனை வளங்கள் வேண்டும்,, முருகன் தனது மாமனாருக்கு காட்சி கொடுத்ததன் மூலம் நாராயணர் பக்தராகவும் செயல்படுகிறார்,,  உண்மையிலேயே முருகனின் அவதார நோக்கமே நாராயண பக்தர்தான்,, நாராயணர் பக்தரால் மட்டுமே அவரின் மகளை கரம் பிடிக்க முடியும், நாராயணர் மகள் முருக பக்தராக மட்டுமே இருக்க வேண்டும் அல்லவா..? 

 அருகருகே இருக்கும் குடும்ப உறவுகளும் இனங்களும் கவனித்துப் பார்த்தோமானால் முருக பக்தைகளாக திகழும் பெண்களை நிச்சயம் நாராயணரை பற்றி நன்கு அறிந்த நாராயணர் பக்தரால் தான் திருமணம் செய்ய முடியும் என்பது விதி,,  இவர்கள் வாழ்க்கை முருகன் வள்ளி தெய்வானை போல  யுகம் அல்ல மன்வந்தரம் கடந்து நிற்கும், அந்த தம்பதியினர் புகழ்,,  அந்த கல்பத்தில் நாராயண பக்தராக பிறந்த சிவபெருமான் மகனாகிய முருகனும், முருக பக்தையாக விளங்கிய நாராயணர் தவப்புதல்விகளும் திருமணம் செய்து கொண்டது சைவ வைணவத்தில் ஒற்றுமையை அழகாக விளக்குகிறது,, இவையெல்லாம் ஆதி காலத்திலிருந்தே நடந்து கொண்டிருக்கிறது நம் கண்களுக்குப் புலப்படவில்லை

 சூரசம்ஹாரம் முடிந்து மறுநாள் முருகன் திருக்கல்யாணத்தை கண்டு வழிபட நாராயணர் பக்தர்களுக்கு முருகப்பெருமான் பக்தைகளும்,,  முருக பக்தர்களுக்கு நாராயணர் பக்தைகளும்,, வரனாக அமைந்து என்றும் இணைபிரியா அர்த்தநாரீஸ்வரரை போல வாழ்வீர்கள்,, 

 இந்த பந்தம் இந்த கலியுகத்திலும் தொடரும்,,, 


No comments:

Post a Comment