குலம்
தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல்
போக கூடாது. குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்க கூடாது - இதெல்லாம்
கிராமத்தில் பேசப்படும் பழமொழிகள். இவை குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை
வலியுறுத்துகின்றன. குல தெய்வங்கள் என்பவை வெறும் வாய்வழிக் கதைகளின் நாயகர்கள்
அல்ல; அவை நம் முன்னோர்கள்.
தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த
சிறந்த மனிதர்களையோ, நமக்கு நினைவுறுத்த, பெரியவர்கள் குல
தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். குல தெய்வங்களாக சிறு தெய்வங்களே
பெருமளவில் விளங்குகின்றன.
இந்த
தெய்வங்களை வழிபட மரபுகள் உள்ளன. பெருங்கோயில்கள் போன்று நினைத்த நாளில் சென்று
வழிபட வாய்ப்புகள் குறைவு. காரணம் பல குல தெய்வ கோயில்களில் நித்திய பூஜை
இருப்பதில்லை, கோயில்களும் மலை, ஆறு, குளம், கண்மாய், காடு போன்ற இடங்களில்தான்
இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து இருக்காது. இந்த குல தெய்வ வழிபாட்டை
கார்த்திகை மாதம் திருகார்த்திகையின் போதும், இன்னொன்று பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும்
மேற்கொள்ளச் சொல்லிகொடுத்திருக்கிறார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம்
நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று
பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.
No comments:
Post a Comment